1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Beach zone committee allowed to build Kalingnar Memorial

கலைஞர் நினைவிடத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதி! – கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம்!

Tamilnadu
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு நினைவிடம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு மறைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள அண்ணா நினைவிடம் அருகே புதைக்கப்பட்டது.

அங்கு அவருக்கு நினைவிடம் கட்ட தற்போது ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது அப்பகுதியில் கலைஞர் நினைவிடம் அமைக்க மாநில கடற்கரை மண்டல ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனால் நினைவிட கட்டிட பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை!