திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 11 ஜனவரி 2022 (23:01 IST)

பழங்களை நடுரோட்டில் கொட்டிய பெண்..வைரலாகும் வீடியோ

தன் கார் மீது தள்ளுவண்டி மோதியது என்பதற்கான  ஒரு  பெண் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிர  மாநிலம்  நாக்பூரில் உள்ள அயோத்தியா நகரில் காரில் சென்றுகொண்டிருந்த ஒரு பெண்ணின் கார் மீது ஒரு தள்ளிவண்டி மோதியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் தள்ளுவண்டிக் காரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

பின்னர், அந்த தள்ளுவண்டியில் இருந்த பழங்களை எடுத்து கீழே தள்ளினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், அப்பெண்ணின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் அவர்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிவருகின்றனர்.