ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 ஜனவரி 2022 (10:50 IST)

டாஸ்மாக்கில் மதுவாங்க புதிய கட்டுப்பாடுகள்! – டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது வாங்க புதிய கட்டுப்பாடுகளை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு, வழிபாட்டு தலங்கள் மூடல் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன.

இந்நிலையில் தற்போது டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள கட்டுப்பாடு அறிவிப்பில், டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் மாஸ்க் அணிய வேண்டும். சானிட்டைசர் உள்ளிட்ட கிருமி நாசினிகள் டாஸ்மாக் கடைகளில் வைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மது வாங்க வருவோர் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்றும், ஒவ்வொரு நபரும் 6 அடி தூரம் இடைவெளி விட்டு நின்றே மது வாங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு மது விற்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.