தொடர்புடைய செய்திகள்
- வாடிவாசல் படத்தின் கதாநாயகி இவர்தான்… ஏற்கனவே வெற்றிமாறன் படத்தில் நடித்திருக்கிறாரே!
- ”இந்தி ஒழிக”ன்னு சொன்னா பத்தாது; “தமிழ் வாழ்க”ன்னு சொல்லணும்! – கமல்ஹாசன் அறிக்கை!
- மருத்துவமனையில் மதுசூதனன்; வதந்திகளை நம்ப வேண்டாம்! – அதிமுக ட்வீட்!
- இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் கனமழை! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
- எந்தெந்த எண்ணெய்களில் விளக்கு ஏற்றக்கூடாது...? அறிந்துகொள்வோம்
சிறுமிக்கு 2 திருமணம்; கணவன், காதலன் உட்பட குடும்பமே சிறையில்..! – பவானியில் பரபரப்பு!
பவானியில் சிறுமியை திருமணம் செய்த கணவன், காதலன் உட்பட குடும்பமே சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பவானி அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அப்புசாமி. இவர் கடந்த 7 மாதத்திற்கும் முன்னதாக 18 வயது பூர்த்தியடையாத தனது மகளை காமராஜ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால் ஏற்கனவே அஜித் என்ற நபரை அந்த பெண் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் அஜித்தை திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் இருவரும் காவல் நிலையத்தில் அடைக்கலம் கேட்டு சென்றுள்ளனர்.
விசாரணையில் மேற்கண்ட சம்பவங்கள் தெரிய வர கணவன் காமராஜ், காதலன் அஜித், பெண்ணின் பெற்றோர்கள், காமராஜின் பெற்றோர்கள் என மொத்தம் 6 பேரை போலீஸார் போக்சோ மற்றும் குழந்தை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
