1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu rain chances in few days

இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் கனமழை! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Tamilnadu
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வலுவடைய தொடங்கியுள்ள நிலையில் மேலும் சில நாட்கள் மழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.