வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: செவ்வாய், 20 ஜூலை 2021 (10:38 IST)

வாடிவாசல் படத்தின் கதாநாயகி இவர்தான்… ஏற்கனவே வெற்றிமாறன் படத்தில் நடித்திருக்கிறாரே!

வாடிவாசல் படத்தின் கதாநாயகியாக நடிக்க ஆண்ட்ரியா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அசுரன் படத்திற்குப் பிறகு வெற்றிமாறன் சூர்யாவை நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தை இயக்கவுள்ளார்.இப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜிவி.பிரகாஸ் இசையமைக்கவுள்ளார். தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தின் வேலைகள் முடிந்தபின்  வாடிவாசலின் நடிக்கவுள்ளார் அவர்.

இந்நிலையில் தயாரிப்பாளார் தாணு சில நாட்களுக்கு முன்னர் வாடிவாசல் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்று இருந்தது. இந்நிலையில் இப்போது படத்தை பற்றிய மற்றொரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வடசென்னை படத்தில் நடித்த ஆண்ட்ரியாவை வாடிவாசல் படத்துக்கும் தேர்வு செய்துள்ளாராம் வெற்றிமாறன்.