”இந்தி ஒழிக”ன்னு சொன்னா பத்தாது; “தமிழ் வாழ்க”ன்னு சொல்லணும்! – கமல்ஹாசன் அறிக்கை!
தமிழக அரசு தமிழ் மொழி வளர்ச்சிக்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும் என கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “கடுமையான முயற்சிகளுக்கு பிறகு கலைஞர் கருணாநிதி அவர்கள் 2004ம் ஆண்டில் தமிழை செம்மொழியாக்கி வெற்றியை ஈட்டி தந்தார். செம்மொழியாக அறிவிக்கப்பட்டு 17 ஆண்டுகள் ஆகியும் மொழி வளர்ச்சிக்கு பெரிய அளவிலான முயற்சிகள் எடுக்கப்படவில்லை” என கூறியுள்ளார்.
மேலும் “இளமையில் திராவிட இயக்கதால் ஈர்க்கப்பட்டு இந்தி எதிர்பாளன் ஆனேன். பிறகு இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்தபோது தமிழை விட சிறந்த மொழி இல்லை என்பதை உணர்ந்தேன். இந்தி ஒழிக என்று முழக்கமிடுவதோடு நின்று விடாமல் தமிழ் வாழ்க என்றுரைக்க மொழி வளர்ச்சி நடவடிக்கைகள் தேவை. தமிழ் மொழி வளர்ச்சிக்கென தமிழக அரசு தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.