1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Azagiri posters are damaged in Chennai

கிழிக்கப்படும் அழகிரி ஆதரவு போஸ்டர்கள்: சென்னையில் பரபரப்பு

அழகிரி
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் தன்னை கட்சியில் மீண்டும் இணைத்து கொள்வார்கள் என்று காத்திருந்த மு.க.அழகிரிக்கு ஏமாற்றமே கிடைத்தது. இதனால் தனது பலத்தை நிரூபிக்க செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் அமைதிப்பேரணி நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

அமைதிப்பேரணி நாளை நடைபெறவுள்ள நிலையில் இதுகுறித்து எந்தவித பரபரப்பும் இன்றி சென்னை வழக்கம்போல் இயங்கி வருகிறது மேலும் இன்று சோபியா விவகாரம் டிரெண்டில் இருந்ததால் மற்ற செய்திகளை ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் அமைதிப்பேரணி குறித்த ஒருசில போஸ்டர்கள் மட்டுமே  சென்னை சுவர்களில் காணமுடிந்தது. ஆனால் அந்த ஒருசில போஸ்டர்களும் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாளை காலை நடைபெறும் அமைதிப்பேரணியில் ஒருலட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று மு.க.அழகிரி அறிவித்திருக்கும் நிலையில் ஒருசில ஆயிரம் பேர்களாவது இந்த பேரணியில் கலந்து கொள்வார்களா? என்ற சந்தேகமே அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
எனக்கு அபிராமியை 2 மாதங்களாக தெரியும்: கலங்கும் சுந்தரத்தின் மனைவி