1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (18:56 IST)

எனக்கு அபிராமியை 2 மாதங்களாக தெரியும்: கலங்கும் சுந்தரத்தின் மனைவி

குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக அபிராமி தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் தமிழகமெங்கும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
போலீஸார் அபிராமியையும் அவரது கள்ளக்காதலனான பிரியாணிக்கடை ஊழியர் சுந்தரத்தையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் இவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது. 
 
இந்நிலையில் சுந்தரத்தின் மனைவி இந்த சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி கூறியது பின்வருமாறு, நானும் சுந்தரமும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். 
 
சென்னை குன்றத்தூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வருகிறோம். கடந்த இரண்டு மாதமாக எனக்கு அபிராமியை தெரியும். அவள் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவாள். 
 
எனது கணவனிடம் நான் கேட்ட பொழுது, எனது குடும்ப நண்பர் என்று கூறினார். நானும் அதனை உண்மை என்று நம்பினேன். ஆனால் அவர்களுக்குள் இப்படி ஒரு கள்ளத்தொடர்பு இருக்கும் என்று எனக்குத் தெரியாது.
 
எனது கணவனை முழுமையாக நம்பி, எனது பெற்றோரை கூட தூக்கியெறிந்துவிட்டு அவர் பின்னால் சென்னை வந்தேன். எனக்கு, இன்று எனது காதல் கணவர் நல்ல பரிசு கொடுத்துள்ளார் என கண்ணீர் நிறம்பிய கண்களோடு தனது வாழ்க்கையை தொகைத்த விரக்தியில் பேசினார்.