திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (14:37 IST)

ஸ்டாலினுக்கு இதுபோன்று நடந்திருந்தால் நான் முதல் ஆளாக எதிர்த்திருப்பேன்: தமிழிசை கண்டனம்

பாஜாகவை விமர்சிர்த்த பெண் கைதானதை அடுத்து ஸ்டாலின் போட்ட டுவிட்டுக்கு தமிழக பாஜக தமிழிசை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
தூத்துக்குடி விமான நிலையத்தில் பாசிச பாஜக ஒழிக என்று கண்டன முழக்கமிட்ட பெண் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். கண்டன முழக்கமிட்ட பெண்ணுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை விமான நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
பாஜகவை விமர்சித்த பெண் கைதுக்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பாசிச பாஜக ஒழிக என்று பதிவிட்டார்.
 
இந்த பதிவுக்கு தமிழிசை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
உண்மையிலே இது தவறான செயல். இதே நிலை ஸ்டாலினுக்கு ஏற்பட்டால் நான் முதல் ஆளாக எதிர்த்திருப்பேன். ஜனநாயக உரிமை என்று கூறிக்கொண்டு விமான நிலையத்தில் அந்த பெண் ஒழுக்கமில்லாமல் நடந்துக்கொண்டதை தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் ஆதரிப்பது வியப்பாக உள்ளது. 
 
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி இருந்திருந்தால் இதுபோல் நடந்திருக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.