வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Updated : வெள்ளி, 1 நவம்பர் 2019 (21:45 IST)

மாணவர்கள் தேசிய ஒற்றுமை தினமாக விழிப்புணர்வு பேரணி

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அனைவராலும் அழைக்கப்படும், சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் 144 வது பிறந்த தினமானது, நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படும் நிலையில், கரூர் மாவட்டத்தில் கரூர் அடுத்த புன்னஞ்சத்திரம் பகுதியில், வீனஸ் குளோபல் கேம்பஸ் சி.பி.எஸ்.இ பள்ளியில் மாணவ, மாணவிகள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடினர்.

மேலும், தேசிய ஒற்றுமை தினத்தினை வலியுறுத்தும் பொருட்டு பேரணியாக கரூர் பேருந்து நிலையம் தொடங்கி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஒரு கி.மீட்டர் தூரம் சென்று, ஒற்றுமை ஒட்டம் நடைபெற்றது.

இந்த பேரணியில் பள்ளித்தாளாளர் குமரவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் இப்பள்ளியின் செயலாளர் நதியா, பள்ளி முதல்வர் பிரீத்தி மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.