பயிற்சிக்கு முகமூடி அணிந்து வந்த வங்கதேச வீரர்கள்!

cricket
Prasanth Karthick| Last Modified வெள்ளி, 1 நவம்பர் 2019 (12:31 IST)
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்காக இந்தியா வந்துள்ள வங்கதேச வீரர்கள் முகமூடி அணிந்து கொண்டு பயிற்சிக்கு வந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா – வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டிகள் நவம்பர் 3ம் தேதி முதல் தொடங்க உள்ளன. இதில் முதலில் நடக்கும் டி20 போட்டிகள் டெல்லியில் நடைபெறுகின்றன. இதற்காக டெல்லி வந்துள்ள வங்கதேச அணி வீரர்கள் காற்று மாசுப்பாட்டால் முகமூடி அணிந்து கொண்டு பயிற்சி செய்து வருகின்றனர்.

டெல்லியில் காற்று மாசுபாடு அதிகம் இருப்பதால் டி20 டெல்லியில் நடத்தக்கூடாது என எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் டெல்லியில்தான் நடத்த வேண்டும் என்பதில் தலைவர் கங்குலி உறுதியா இருந்தார்.

தற்போது அருண் ஜெட்லீ கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் வங்கதேச வீரர்கள் பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :