ஞாயிறு, 1 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: சனி, 31 ஜனவரி 2026 (17:18 IST)

விஜய் நாட் ரீச்சபிள்!.. என் டைம் வேஸ்ட் பண்ணாதீங்க!.. செந்தில் பாலாஜி அட்டாக்!...

senthil balaji
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தபின் அவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.. குறிப்பாக விஜய் அமைதியாக இருக்கிறார்.. முக்கிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதில்லை.. முக்கிய பிரச்சனைகள் பற்றி பேசுவதில்லை..

இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ஒரு பொதுக்கூட்டம் நடத்தி அங்கு மட்டும் 20 நிமிடம் ஆவேசமாக பேசுகிறார். அதன்பின் சைலன்ட் மோடுக்கு போய் விடுகிறார்.. திருப்பரங்குன்றம் விவகாரம், ஜனநாயகன் ரிலீசில் சிக்கல், சிபிஐ விசாரணை என எதைப் பற்றியும் விஜய் எங்கும் கருத்து சொல்லவில்லை என்கிற விமர்சனம் அவர் மீது இருக்கிறது.

ஆனால் விஜயோ அதிகம் பேச தேவையில்லை.. செயலில் கட்டினால் போதும் என்று ஒரு புது விதமான அரசியலை செய்து வருகிறார்..இந்நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் செய்தியாளர்கள் தமிழக வெற்றி கழகம் பற்றி சில கேள்விகளை கேட்டார்கள்..

அதற்கு பதில் சொன்ன செந்தில் பாலாஜி ‘நீங்கள் உங்களுக்கு டிஆர்பி கிடைக்க வேண்டும் என்பதற்காக என்னிடம் இந்த கேள்வியை கேட்கிறீர்கள்.. அவர்களிடம் கேட்காமல் என்னிடம் மட்டுமே இதை கேட்கிறீர்கள்.. களத்துக்கே வராத, எப்போதுமே நாட் ரீச்சபிள் நபராக இருக்கும் ஒருவரைப் பற்றி கேள்வி கேட்டு என்னுடைய நேரத்தையும், உங்களின் நேரத்தையும் வீணடிக்காதீர்கள்’ என அவர்களுக்கு பதில் சொன்னார்.