அதிக புற்கள் இருந்தால் அருமையா விளையாடலாம்! – பிட்ச் பராமரிப்பாளர் தல்ஜீத்

Prasanth Karthick| Last Updated: வியாழன், 31 அக்டோபர் 2019 (11:51 IST)
இந்தியா- வங்கதேச அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிக்கு மைதானத்தில் புற்கள் அதிகமாக இருக்க வேண்டும் என பிட்ச் பராமரிப்பாளர் தல்ஜீத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் வங்கதேச அணி மோதும் டெஸ்ட் போட்டிகள் நவம்பர் 22 முதல் தொடங்க இருக்கிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக இதை பகல் – இரவு ஆட்டமாக நடத்த முடிவெடுத்துள்ளனர். ஆனால் பகல் – இரவு ஆட்டமாக நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அவற்றை எப்படி சரிசெய்வது என்று பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில் பகல் – இரவு ஆட்டத்தை வெற்றிகரமாக நடத்த தேவையான ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார் 22 ஆண்டு காலம் பிட்ச் பராமரிப்பில் ஈடுபட்டு வந்த தல்ஜீத். இதுகுறித்து கூறிய அவர் ”டெஸ்ட் ஆட்டத்தின்போது இரவில் பனிப்பொழிவு மிகவும் அதிகமாக இருக்கும். இதனால் பந்து எளிதில் ஈரமாகி விடும் இதை தடுக்க அவுட் பீல்டில் உள்ள புற்களின் உயரத்தை குறைக்க வேண்டும். மேலும் பிட்ச்சில் புற்கள் 11 மில்லிமீட்டர் உயரம் வரை வளர்ந்திருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். அப்போதுதான் பந்துவீச்சுக்கு அது சாதகமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இரவு 9 மணியிலிருந்து பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் முடிந்தளவு ஆட்டத்தை 9 மணிக்குள் முடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :