செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: புதன், 30 அக்டோபர் 2019 (14:25 IST)

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்..எல்லையில் துப்பாக்கிச் சூடு

இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் பொதுமக்களில் ஒருவர் பலி

இன்று காலை ஜம்மு காஷ்மீர் பகுதியின், மச்சில் என்ற இடத்தில் எல்லை கட்டுபாட்டு கோட்டை அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து எல்லை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.