1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 5 ஜனவரி 2022 (13:19 IST)

சட்டமன்ற நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கிய நிலையில் இனிவரும் நாட்களின் சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பாக ஒளிபரப்பாகும் என சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய இரண்டு தினங்கள் மட்டும் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஜனவரி 6, 7 ஆகிய இரு நாட்களிலும் சட்டமன்றத்தில் கேள்வி நேரம் மட்டும் நேரலையாக ஒளிபரப்பப்படம் என்று சபாநாயகர் அப்பாவு அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
மேலும் நாளை மறுநாள் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் பதில் நிகழ்ச்சியும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவித்துள்ளார். சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை பொதுமக்கள் இந்த நேரடி நிகழ்ச்சியின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடதக்கது