ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 13 டிசம்பர் 2021 (15:04 IST)

செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டம்! – நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா?

சென்னை செயிண்ட் ஜார்க் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் முன்னதாக கலைவாணர் அரங்கில் நடைபெற்று வந்த நிலையில், எதிர்வரும் சட்டப்பேரவை கூட்டம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற உள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள சபாநாயகர் அப்பாவு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஜனவரி 5ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுனர் உரையுடன் பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கூட்டத்தொடர் காகிதம் இல்லாமல் முழுவதும் கணினி மூலமாக நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சட்டமன்ற நடவடிக்கைகள் நேரலை செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் கலைவாணர் அரங்கில் அதற்கான வசதிகள் இல்லாததால் ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் கூட்டத்தொடர் நேரலை செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது. அதனால் இந்த கூட்டத்தொடர் நேரலை செய்யபடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.