1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 3 ஜனவரி 2022 (15:06 IST)

சட்டசபை கூடும் தேதி, இடம்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

தமிழக சட்டசபை கூடும் தேதி மற்றும் இடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டசபை சபாநாயகர் அப்பாவு அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார். 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டமன்றம் கலைவாணர் அரங்கில் தான் கூடியது என்பது தெரிந்ததே. ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததை அடுத்து மீண்டும் கோட்டையில் உள்ள சட்டமன்றத்தில் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக கலைவாணர் அரங்கில் சட்டசபை கூடும் என்றும் ஜனவரி 5ஆம் தேதி முதல் சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்
 
2 நோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும் என்றும் இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவும் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.