வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 17 டிசம்பர் 2021 (12:13 IST)

பெண்களை அப்படி பேசியது தவறு.. மன்னித்துவிடுங்கள்! – காங்கிரஸ் எம்.எல்.ஏ!

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ பேசியது சர்ச்சையான நிலையில் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக உள்ளவர் ரமேஷ் குமார். தற்போது கர்நாடகாவில் நடந்து வரும் சட்டசபை கூட்டத்தில் பேசிய ரமேஷ்குமார், பெண்களால் பாலியல் வன்கொடுமையை தடுக்க முடியாவிட்டால் அதை மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என பேசியது கடும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது இதற்காக சட்டமன்றத்தில் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டு பேசிய ரமேஷ்குமார் “எனது கருத்து பெண்களை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்பதில் எந்த பிரச்னையும் இல்லை. இதயத்தின் ஆழத்தில் இருந்து மன்னிப்பு கேட்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். எனினும் அவர் அவ்வாறு பேசியதற்கு நடவடிக்கை தேவை என பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.