தொடர்புடைய செய்திகள்
- சூர்யாவின் பைக்கை இரவல் வாங்கிய அஜித்; ஆளை மாற்றி தீர்த்துக்கட்டிய கும்பல்! – அரக்கோணத்தில் பரபரப்பு!
- முதல்வர் பழனிச்சாமிக்கு கொரோனா பரிசோதனை! – முடிவுகள் வெளியானது!
- நம்மக்கிட்டயே கதையை மாத்துறீங்களே! – ஜெயக்குமார் பதிலுக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்!
- இன்றும் 4000க்கும் மேல் பாதிப்பு: பலி எண்ணிக்கை 2000ஐ தாண்டியதால் பரபரப்பு
- டிஜிட்டல் மயமாகும் டாஸ்மாக் நிர்வாகம்! – டெண்டர் அறிவிப்பு!
இதை தடை செய்யலைனா நபிகளை கிண்டல் பண்ணுவேன்! – ஓவியர் சுரேந்திர குமார் கைது!
முகமது நபியை கிண்டல் செய்து சித்திரம் வெளியிடுவதாக பதிவிட்ட ஓவியர் சுரேந்திரகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீப காலமாக சமூக வலைதளங்களில் மதரீதியான மோதல்கள், வாக்குவாதங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் இந்து மத கடவுளர்கள் குறித்த கதைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சிலர் பதிவிட்டிருந்தது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்கு உள்ளாகி வந்தது.
இந்நிலையில் அந்த சர்ச்சையின் போது தனது ட்விட்டரில் பதிவிட்ட ஓவியர் சுரேந்திர குமார், குறிப்பிட்ட அந்த யூட்யூப் சேனலில் பின்னணியில் இஸ்லாமிய அமைப்புகள் இருந்து செயல்படுவதாக குற்றம் சாட்டியதோடு, அந்த வீடியோவை தடை செய்யாத நிலையில் நபிகள் நாயகத்தை கிண்டல் செய்யும் வகையில் கார்ட்டூனை வெளியிடுவதாகவும் பதிவிட்டிருந்தார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இஸ்லாமிய அமைப்புகள் சில அளித்த புகாரின் பேரில் ஓவியர் சுரேந்திரகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் மேலும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
