வியாழன், 8 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 ஜூலை 2020 (09:35 IST)

முதல்வர் பழனிச்சாமிக்கு கொரோனா பரிசோதனை! – முடிவுகள் வெளியானது!

முதல்வர் பழனிச்சாமிக்கு கொரோனா பரிசோதனை! – முடிவுகள் வெளியானது!
தமிழக அமைச்சர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அமைச்சர்கள் சிலருக்கே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் கே.பி அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜூ ஆகியோருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர் மற்றும் அவருடன் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது.