1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 ஜூலை 2020 (13:19 IST)

டிஜிட்டல் மயமாகும் டாஸ்மாக் நிர்வாகம்! – டெண்டர் அறிவிப்பு!

டிஜிட்டல் மயமாகும் டாஸ்மாக் நிர்வாகம்! – டெண்டர் அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை கணினி மயமாக்குவதற்கான டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கான வசதிகளை டாஸ்மாக் கடைகளில் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் டாஸ்மாக் கடைகளில் உள்ள மது இருப்பு மற்றும் விற்பனை ஆகியவற்றை அறிக்கையாக தயாரித்து கணினிமயமாக்க டெண்டரை டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்மூலம் டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கான வசதிகளையும் ஏற்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.