தொடர்புடைய செய்திகள்
- ஆனாலும் தைரியம்தான்… சாமான்யன் படத்தின் 75ஆவது நாள் விழாவை இளையராஜாவோடு சேர்ந்து கொண்டாடிய ராமராஜன்!
- அபராதம் விதிப்பு... ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படும்.! நடிகர் பிரசாந்த்.!!
- யூடியூபர் இர்ஃபானுக்கு ரூ.1,500 அபராதம் .. சென்னை காவல்துறை உத்தரவு..!
- ஹெல்மெட் அணியாமல் சென்ற பிரசாந்துக்கு அபராதம்..! எவ்வளவு தெரியுமா.?
- ஏழைகளிடம் இருந்து 8,500 கோடி ரூபாய் பிடித்தம் செய்த வங்கிகள்: அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம்..!
விஜய் சேதுபதியை உதைத்தால் பரிசு! அர்ஜுன் சம்பத் மீதான வழக்கில் தீர்ப்பு..!
விஜய் சேதுபதியை உதைத்தால் பரிசு கொடுப்பதாக அர்ஜுன் சம்பத் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் அது குறித்து பதிவு ஆன வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் சேதுபதி முத்துராமலிங்கத் தேவரை விமர்சித்தார் என்று கூறப்பட்ட நிலையில் அது குறித்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தனது சமூக வலைதள பக்கத்தில் முத்துராமலிங்க தேவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ஆயிரம் ரூபாய் பரிசு வழங்குவேன் என்று தெரிவித்திருந்தார்.
இது பெரும் சர்ச்சை ஆன நிலையில் இதுகுறித்து விஜய் சேதுபதி தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் கோவை போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தது.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கின் தீர்ப்பில் அர்ஜுன் சம்பத் தனது குற்றத்தை ஒப்பு கொண்டதால் அவருக்கு 4 ஆயிரம் ரூபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
