1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (07:15 IST)

13 மாதங்களில் 9 பெண்களை கொலை செய்த கொலையாளி.. பிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்..

13 பெண்களை 9 மாதங்களில் சேலையால் கழுத்தை நெரித்து சீரியல் கொலை செய்த கொலைகாரனை பிடிக்க முடியாமல் உத்தரப்பிரதேச மாநில போலீசார் திணறி கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பரேலி என்ற கிராம பகுதியில் கடந்த ஜூன் மாதம் அடுத்தடுத்து மூன்று கொலைகள் நடந்தது. அதனை அடுத்து சில மாதங்களில் சில கொலைகள் நடந்த நிலையில் மொத்தம் எட்டு கொலை நடந்ததாகவும் கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் 40 முதல் 60 வயதுக்கு உள்ள பெற்ற பெண்கள் என்றும் அனைவருமே சேலையால் கழுத்தை நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து இந்த கொலைகளை செய்தது ஒரே நபர் தான் என்று உத்தரப்பிரதேச காவல்துறை கருதி கொலையாளியை பிடிக்க 300 காவலர்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. கொலை நடந்த பகுதியில் ரோந்து பணி,  ஏற்கனவே குற்றம் செய்த குற்றவாளிகளை கண்காணிக்கும் பணி ஆகியவை நடைபெற்றும் கொலையாளி பிடிபடவில்லை.

இந்த நிலையில் ஜூலை இரண்டாம் தேதி அனிதா என்ற பெண்ணும் கொலை செய்யப்பட்டதை அடுத்து மொத்தம் ஒன்பது கொலை நடந்ததால் உத்தரபிரதேச போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். 13 மாதத்தில் 9 கொலை நடந்திருக்கும் இந்த வழக்கு தொடர்பாக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் சோதனை செய்யப்படுவதாகவும் அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த கொலைக்கு பின்னணியில் இருப்பவர்களை விரைவில் கண்டுபிடிப்போம் என்றும் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva