ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 3 ஆகஸ்ட் 2024 (13:56 IST)

யூடியூபர் இர்ஃபானுக்கு ரூ.1,500 அபராதம் .. சென்னை காவல்துறை உத்தரவு..!

யூடியூபர் இர்ஃபானுக்கு ரூ.1,500 அபராதம் விதித்து சென்னை காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தலைக்கவசம் அணியாமல், சேதமடைந்த நம்பர் ப்ளேட் கொண்ட வாகனத்தை ஓட்டியதாக யூடியூபர் இர்பான் மீது புகார் எழுந்தது. இதுகுறித்த வீடியோவும் இணையத்தில் வைரலானது.
 
இந்த நிலையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக எழுந்த புகாரை தொடர்ந்து யூடியூபர் இர்ஃபானுக்கு ரூ.1,500 அபராதம் சென்னை போக்குவரத்து காவல்துறை விதித்தது. தலைக்கவசம் அணியாமல் பைக் ஓட்டியதற்கு ரூ.1,000, நம்பர் ப்ளேட் சேதம் அடைந்திருந்ததால் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நடிகர் பிரசாந்த் தலைக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அடுத்ததாக யூடியூபர் இர்ஃபானுக்கும் அதேபோன்று அவர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran