ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (14:03 IST)

ஆனாலும் தைரியம்தான்… சாமான்யன் படத்தின் 75ஆவது நாள் விழாவை இளையராஜாவோடு சேர்ந்து கொண்டாடிய ராமராஜன்!

மேதை படத்துக்குப் பிறகு சாமான்யன் படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுத்துள்ளார் ராமராஜன். அந்த படம் மே 23 ஆம் தேதி ரிலீஸானது. படத்துக்கு ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனாலும் படம், ரசிகர்களை திரையரங்கம் நோக்கி இழுக்கவில்லை. இதுவரை படம் தமிழ்நாடு முழுவதும் 15 லட்ச ரூபாய் வசூலைக் கூட தாண்டவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் இந்த பட தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என தெரிகிறது.

இந்நிலையில் படம் ஓடாததற்கு படத்தின் தயாரிப்பாளர்தான் காரணம் என்று ராமராஜன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அவரது நேர்காணலில் “நாங்கள் படத்தை எடுத்துக் கொடுத்துவிட்டோம். அதற்கு விளம்பரம் செய்தால்தானே மக்கள் தியேட்டருக்கு வந்து பார்ப்பார்கள். ஆனால் தயாரிப்பாளர் படத்துக்கு விளம்பரமே செய்யாமல் படத்தைக் கொன்றுவிட்டார். எனக்கும் சம்பள பாக்கியும் கொடுக்கவில்லை.” என ஆதங்கத்தை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் இப்போது சாமான்யன் திரைப்படம் ஆலங்குளத்தில் உள்ள TVP மல்டிபிளக்ஸ் திரையரங்கில் 75 நாட்களைக் கடந்து இந்த திரைப்படம் ஓடிவரும் (ஓட்டப்பட்டு) நிலையில் படத்தின் இயக்குனர் ராஹேஷ் மற்று ராமராஜன் ஆகிய இருவரும் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்துள்ளனர். மேலும் இயக்குனர் ராஹேஷுக்கு இளையராஜா நினைவுப் பரிசையும் வழங்கியுள்ளார்.