புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (12:40 IST)

ரஜினி ஏமாத்தலை: விஜய்தான் ஏமாத்துறார்! – அர்ஜுன் சம்பத் குற்றசாட்டு

நடிகர் விஜய் படங்களில் புரட்சிகரமாக பேசிவிட்டு நிஜத்தில் ஊழல் செய்வதாக அர்ஜுன் சம்பத் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்ற சம்பவம் தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் ரீதியாக மிரட்டுவதற்காக விஜய்க்கு இதுபோன்ற நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக பல்வேறு விவாதங்கள் எழுந்தது. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாத விஜய் வருமானவரி சோதனை முடிந்த நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் விஜய், ரஜினிகாந்த உள்ளிட்ட பிரபலங்கள் சமீப காலமகா வருமானவரி பிரச்சினைகளை சந்தித்திருப்பது குறித்து பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், படங்களில் விஜய் பஞ்ச் டயலாக் பேசி நல்லவராக நடித்து கொண்டு, உண்மையில் வரி ஏய்ப்பு செய்வதாக கூறியுள்ளார்.

மேலும் ரஜினி குறித்து பேசிய போது அவர் வரி ஏய்ப்பு செய்யவில்லை என்றும், ரஜினி நேர்மையாக வரி செலுத்துபவர் என வருமானவரித்துறையே சான்று அளித்திருப்பதாகவும் பேசியுள்ளார்.