1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (11:45 IST)

நாங்களெல்லாம் அந்த காலத்துல…. – மாணவர்களுக்கு செல்லூர் ராஜூ அறிவுரை

மதுரையில் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அப்போது பேசிய அவர் ”நாங்கள் படிக்கும் காலத்தில் தரையில் அமர்ந்துதான் படித்தோம். இதுபோன்ற மேசைகள் அப்போது இல்லை. இன்று மாணவர்களுக்கு பல்வேறு வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. தரையில் அமர்ந்து படித்துதான் இன்று அமைச்சராகி உள்ளோம். மாணவர்கள் நன்றாக படித்து இதுப்போன்ற உயர்பதவிகளுக்கு வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவில் அதிக கல்வியறிவு பெற்ற மாநிலமாக முதலிடத்தில் கேரளா இருந்தது. தமிழக அரசு கல்விக்காக மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளால் இன்று தமிழகம் முதலிடத்தில் உள்ளது என கூறியுள்ளார்.