திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (12:35 IST)

’மாஸ்டர்’ படப்பிடிப்பில் மீண்டும் விஜய்! ரசிகர்கள் உற்சாகம்

தளபதி விஜய் நடித்து வந்த ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கையோடு சென்னைக்கு அழைத்து வந்தனர். இரண்டு நாட்கள் விடிய விடிய விஜய்யிடம் விசாரணை நடத்திய நிலையில் நேற்று இரவுடன் விசாரணை முடிவடைந்தது
 
விஜய் வீட்டிலிருந்து ஒரு ரூபாய் கூட கணக்கில் வராத ரூபாய் கண்டுபிடிக்கப்படவில்லை என்று செய்திகள் வெளியானது. அதுமட்டுமன்றி ’பிகில்’ திரைப்படத்திற்காக அவர் ரூபாய் 30 கோடி சம்பளம் வாங்கியதாகவும் அதற்குரிய வரியை அவர் கட்டி விட்டதாகவும் தெரியவந்தது. இதனை அடுத்து விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை முடிவடைந்ததாக செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் இன்று மீண்டும் நடிகர் விஜய் நெய்வேலியில் நடக்கும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.  கடந்த இரண்டு நாட்களாக விஜய் இல்லாவிட்டாலும் விஜய் இல்லாத காட்சிகளை படமாக்கி கொண்டிருந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தற்போது விஜய் நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருவதாக கூறப்படுகிறது. வருமானவரி பிரச்சினையை முடித்து விட்டு மீண்டும் விஜய் ’மாஸ்டர்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டதை அறிந்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்