1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. anubumani ramadoss about admk mlas

அந்த நிலைக்கு எங்களை தள்ளாதீங்க!.. விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!...

anbumani
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க மேலும் 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தை, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டது.

அதையேற்று அந்த கட்சிகளும் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தனர். இதையடுத்து தவெக ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. விஜயும் முதலமைச்சராக மாறிவிட்டார். அதோடு ஏற்கனவே அதிமுக எம்.எல்.ஏக்கள் 24 பேர் தவெகவுக்கு ஆதரவாக சட்டசபையில் வாக்களித்தனர். அதோடு அதிமுக எம்.எல்.ஏக்கள் நான்கு பேர் தங்கலின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு சமீபத்தில் தவெகவில் இணைந்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அதோடு, தவெக குதிரை பேரம் நடத்துவதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் இதுபற்றி கருத்து தெரிவித்த பாமக அன்புமணி ராமதாஸ் ‘அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து 10 நிமிடத்தில் தவெகவில் இணைந்திருக்கிறார்கள்.. 20 நாட்களில் இது போன்ற ஒரு மோசடி செயலை செய்வது கண்டிக்கத்தக்கது..

ராஜினாமா செய்தவர்கள் இனி அவர்கள் தொகுதிக்குள் போக முடியாது.. இதையெல்லாம் இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பொது வேட்பாளரை நிறுத்தம் நிலைக்கு எங்களை தள்ளிவிடாதீர்கள். இது ஒரு ஜனநாயக படுகொலை.. தமிழ்நாட்டில் தேவையில்லாத ஒரு இடைத் தேர்தலை மக்கள் சந்திக்க வேண்டுமா?.. ராஜினாமா செய்த நான்கு வேட்பாளர்களும் இடைத்தேர்தலில் படுதோல்வி அடைவார்கள்’ எனவும் அவர் கூறியிருக்கிறார்.