1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : புதன், 19 பிப்ரவரி 2020 (13:37 IST)

சிஏஏவுக்கு எதிராக 2 கோடி கையெழுத்து பிரதிகள்.. ஜனாதிபதியிடம் ஒப்படைத்த எதிர்கட்சிகள்

சிஏஏவுக்கு எதிரான கையெழுத்து பிரதிகளுடன் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் தலைவர்கள், குடியரசுத் தலைவருடன் சந்திப்பு.

சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளும், மாணவ அமைப்புகளும் போராடி வரும் நிலையில், சட்டமன்றத்தில் சிஏஏ வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரவேண்டும் என எதிர்கட்சிகள் முழக்கமிட்டன. ஆனால் அதற்கான மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், திமுக வெளிநடப்பு செய்தது.

இந்நிலையில் சிஏஏவுக்கு எதிராக 2 கோடி கையெழுத்து பிரதிகளை திமுக உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள், குடியரசு தலைவர் மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் ஒப்படைத்தனர்.