திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: புதன், 19 பிப்ரவரி 2020 (11:51 IST)

குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியா?? கன்ஃப்யூஸான இல.கணேசன்

குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதாக பாஜகவைச் சேர்ந்த இல.கணேசன் மாற்றி கூறியுள்ளார்.

வருகிற 24 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன் படி டெல்லி, ஆக்ரா போன்ற நகரங்களை சுற்றிப் பார்க்க உள்ளனர்.

இந்நிலையில் டிரம்ப்பின் வருகையை ஒட்டி குஜராத்தில் குடிசை பகுதிகளில் சுவர் எழுப்பப்படுகிறது. இது குறித்து பாஜகவை சேர்ந்த இல.கணேசனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ”குஜராத்தில் காங்கிரஸ் அரசு தான் நடைபெறுகிறது. அதனை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்” என கூறியுள்ளார்.

குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில், இல.கணேசன் இவ்வாறு மாற்றி கூறியுள்ளார்.