வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: புதன், 19 பிப்ரவரி 2020 (12:36 IST)

”கத்தியின்றி, ரத்தமின்றி, கருத்தடை செய்துகொள்ள வாருங்கள்” ஆண்களுக்கு கோரிக்கை விடுக்கும் விஜயபாஸ்கர்

கருத்தடை சிகிச்சை செய்துக்கொள்ள ஆண்களும் முன்வரவேண்டும் என சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், ஆண்கள் கருத்தடை சிகிச்சை செய்ய ஊக்குவிப்பதில் அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ”ஆண்டுக்கு இரண்டு லட்சம் பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என கூறியுள்ளார்.

மேலும், “ஆண்களுக்கு கத்தியின்றி, ரத்தமின்றி, எவ்வித தழும்புமின்றி கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டு 80 பேருக்கும், 2019 ஆம் ஆண்டுக்கு 800 பேருக்கும் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனவும் கூறியுள்ளார்.