திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 19 பிப்ரவரி 2020 (11:41 IST)

தலைவர் ஆன் டிஸ்கவரி: பியர் கிரில்ஸ் வெளியிட்ட மோஷன் போஸ்டர்!!

நடிகர் ரஜினிகாந்த மற்றும் பியர் கிரில்ஸ் மேற்கொண்ட பயணம் விரைவில் டிஸ்கவரி சேனலில் வெளியாகும் என மோஷன் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

 
உலக புகழ்பெற்ற பியர் க்ரில்ஸின் காட்டு பயண சாகசமான ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் இதுவரை கலந்து கொண்டுள்ளனர். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா முதல் ஹாலிவுட் ஸ்டார்கள் வரை பலர் கலந்து கொண்டுள்ளனர். 
 
இந்த நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு பிரதமர் மோடி கலந்து கொண்டார். மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் முதன்முறையாக கலந்து கொண்ட இந்திய பிரபலம் பிரதமர் நரேந்திர மோடிதான். அதற்கு பிறகு தற்போது நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். 
 
பியர் க்ரில்ஸ் மற்றும் ரஜினிகாந்த் கந்ராடகாவில் உள்ள பந்திப்பூர் காட்டுக்குள் பயணித்தனர். சுமார் இரண்டு நாட்கள் நீண்ட இவர்களது பயணம் விரைவில் டிஸ்கவரி சேனலில் ஒளிப்பரப்பட்ட உள்ளது என பியர் கிரில்ச் தனது டிவிட்டர் பக்கத்தில் மோஷன் போஸ்டர் ஒன்றை போட்டுள்ளார். 
 
இதனை ரஜினி ரசிகர்கள் #ThalaivaOnDiscovery என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி தங்களது கொண்டாத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதோ அந்த மோஷன் போஸ்டர்...