1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Another Sathankulam SI Balakrishnan arrested

தீவிர தேடுதலுக்கு பின் எஸ்ஐ பாலகிருஷ்ணன் கைது: காவலர் முருகனும் கைது என தகவல்

பாலகிருஷ்ணன்
எஸ்ஐ பாலகிருஷ்ணன் கைது: காவலர் முருகனும் கைது என தகவல்
சாத்தான்குளம் தந்தை - மகன் வழக்கில் நேற்றிரவு எஸ்ஐ ரகு கணேஷ் கைது செய்யப்பட்ட நிலையில் தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்செய்யப்பட்டார். எஸ்.ஐ. ரகு கணேஷுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் என மாஜிஸ்திரேட் ஹேமா உத்தரவு பிறப்பித்தார். மேலும் வரும் 16-ம் தேதி ரகு கணேஷை மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்தார்.
 
இந்த நிலையில் இன்னொரு எஸ்.ஐயான பாலகிருஷ்ணன் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் தலைமறைவாக இருப்பதாகவும் அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததாகவும் தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி பாலகிருஷ்ணன் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகியோர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
எனவே தற்போது வரை சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கி இரண்டு எஸ்.ஐ.க்கள் ஒரு தலைமை காவலர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் மூவரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிரமாக இருப்பதாகவும் இன்னும் ஒருசில மணி நேரங்களில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் எறும் கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
2036 வரைக்கும் நான்தான் ரஷ்ய அதிபர்! – புதினின் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த எதிர்கட்சி!