திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 1 ஜூலை 2020 (15:58 IST)

டிரெண்டிங் இடம்பிடித்த ’’ஸ்டாலினின் தளபதி… ’’

திமுகவின் பொருளாளாரகவும் பொறுப்பு வகித்து வருவதை அடுத்து அக்கட்சியின் பொதுச்செயலாளாராகப் பதவி வகிக்கவுள்ள எம்.எல்.ஏ துரைமுருகனுக்கு இன்று 82 அவது பிறந்தநாள் . இவருக்கு அரசியல் பிரமுகர்கள், நாட்டில் முக்கிய கட்சி தலைவர்கள், உடன் பிறப்புகள் என பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

துரைமுருகன் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி இருந்தபோதே கட்சியின் பொருளாளராக இருந்து அவருக்கு வலது கரமாக இருந்தார். இந்நிலையில், கருணாநிதி மறைவுக்குப் பின் அக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற  ஸ்டாலினுக்கு துணைநிற்கிறார்.

இதைப்போற்றும் வகையில் இன்று துரைமுருகனை புகழ்ந்து அவரது கட்சியினர் டுவிட்டர் ஹேஸ்டேக் உருவாக்கி பதிவிட்டு டிரெண்டிங் செய்து வருகின்றனர்.