திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 1 ஜூலை 2020 (11:55 IST)

சாத்தான்குளம் சம்பவம் சின்ன இஷ்யூவா? எல்.முருகனுக்கு உதயநிதி கேள்வி

சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த விவகாரம் குறித்து மதுரை ஐகோர்ட் கிளை தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறது 
 
ஆனால் ஒரு சில அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தை அரசியலாக்கி இதனால் தங்களுடைய கட்சிக்கு என்ன சாதகங்கள் ஏற்படலாம் என்ற ரீதியில் யோசித்து வருகின்றன. சாத்தான்குளம் சம்பவம் கடந்த சில நாட்களாகவே அரசியலாக்கப்படுவதாகவும், அரசியல்வாதிகள் இதனை தூண்டி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது 
 
இந்த நிலையில் இது குறித்து பேட்டியளித்த பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் தன்னுடைய சொந்த கட்சியின் எம்எல்ஏ ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தபோது அவரது குடும்பத்தினர்களிடம் நேரில் சென்று ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை
 
ஆனால் ஒரு சின்ன இஷ்யூவான சாத்தான்குளம் விஷயத்திற்காக கனிமொழி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடியாக செய்து அரசியல் செய்து வருவதாக தெரிவித்தார் சாத்தான்குளம் இரட்டை மரணத்தை சின்ன இஸ்யூ என்று கூறிய எல் முருகனுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
‘ஒரு சின்ன இஷ்யூ.’ ஸ்டெர்லைட்டில் 13 பேரை சுட்டுக்கொன்றாலும், சாத்தான்குளத்தில் 2 பேரை அடித்தே கொன்றாலும்... அது இவர்களுக்குச் சின்ன இஷ்யூ-தான். ஆனால், நாட்டின் மிகப்பெரிய இஷ்யூவே இவர்கள்தான் என்பதை மக்கள் அறிவர். ‘தலைகீழாகத்தான் குதிப்பேன்’ என்றாலும் நீங்க நோட்டாவுக்கு கீழதான்! என்று உதயநிதி தனது டுவிட்டில் கூறியுள்ளார்