வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 நவம்பர் 2023 (10:25 IST)

விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்: அண்ணாமலை

நேற்று விஜய் அரசியலுக்கு வர  இருப்பதை மறைமுகமாக தெரிவித்த நிலையில் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

30, 40 ஆண்டுகளாக பழையவர்கள் தான் தமிழக அரசியலில் இருக்கிறார்கள். புதியவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். குறிப்பாக விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வந்து தனது கருத்தை நிலை நாட்ட வேண்டும். எல்லோருடைய சித்தாந்தத்தையும் மக்கள் பார்த்து முடிவு செய்து கொள்ளட்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

நேற்றைய நிகழ்ச்சியில் நடிகர் விஜய் காவி சட்டையில் வந்தார் என்பதும் நெற்றியில் குங்குமத்துடன் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவர் பாஜகவின் ஆதரவாளராக தான் நேற்று மேடைக்கு வந்தார் என்று ஒரு சிலர் விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் அண்ணாமலை இன்று திடீரென விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran