வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 2 நவம்பர் 2023 (07:18 IST)

என்னைக் கொல்லாம விட்டதுக்கு நன்றி… எனக்கு விஜய் இன்னும் அத வாங்கித் தரல – திரிஷா பேச்சு!

கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆன லியோ திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய பல நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்று பேசினார்கள்.

மேடையில் திரிஷா பேசும்போது “என் கதாபாத்திரத்தைக் கொல்லாமல் விட்டதற்கு நன்றி. விஜய் எனக்கு இன்னும் காரப்பொறி வாங்கித் தரவில்லை(கில்லி படத்தைக் குறிப்பிட்டு). அதனால் அவருடன் இன்னொரு படம் பண்ணலாமா?” என பேசி ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தார்.

எப்போதும் லோகேஷ் கனகராஜ் படத்தில் பெண் கதாபாத்திரங்கள் கொல்லப்பட்டு விடும் என்பதால் லியோ படத்திலும் திரிஷா கதாபாத்திரமும் கொல்லப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லோகேஷ் அவ்வாறு செய்யாமல் இருந்தது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்தது.