விஜய் ஜேம்ஸ் படத்தில் நடிக்கணுமா… துண்டு போட்டு வைத்த கௌதம் மேனன்!
கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆன லியோ திரைப்படம் இதுவரை 541 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய பல நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்று பேசினார்கள்.
அப்போது பேசிய இயக்குனர் மிஷ்கின் விஜய் ஒரு ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைல் படத்தில் நடிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அதற்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கைதட்டி ஆர்ப்பரித்தனர். அதன் பின்னர் பேசிய இயக்குனர் கௌதம் மேனன் “விஜய் ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைல் கதையில் நடிக்கவேண்டுமென்றால் அவர் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில்தான் நடிக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.
2012 ஆம் ஆண்டில் விஜய் கௌதம் மேனன் கூட்டணியில் யோஹன் அத்தியாயம் ஒன்று திரைப்படம் தொடங்கப்பட்டு ஷூட்டிங் செல்லாமலேயே கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.