ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 2 நவம்பர் 2023 (06:57 IST)

நான் பார்த்த ஒரே லெஜண்ட் விஜய்தான்… ஐஸ் மலையையே தூக்கி வைத்த மிஷ்கின்!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆன லியோ திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நடிகர் விஜய் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினார். இதில் படத்தில் பணியாற்றிய பல நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்று பேசினார்கள்.

படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்த மிஷ்கின் மேடையேறி பேசும்போது விஜய்யை புகழ்ந்து தள்ளினார். அவர் பேசும் போது “நான் மைக்கேல் ஜாக்சன் மற்றும் ப்ரூஸ் லி என்ற இரண்டு லெஜண்ட்களை பற்றி படித்து தெரிந்து கொண்டேன். அவர்களை நேரில் பார்த்ததில்லை. நான் பார்த்த ஒரே லெஜண்ட் விஜய்தான்” எனக் கூற அரங்கம் ஆர்ப்பரித்தது.

தொடர்ந்து பேசிய அவர் “சில தினங்களுக்கு முன்னர் நான் விஜய் பற்றி தவறாக பேசியதாக நான் இறந்து விட்டதாக போஸ்டர் அடித்தார்கள் எனக் கேள்வி பட்டேன். அவர்கள் கண்டிப்பாக விஜய் ரசிகர்களாக இருக்க முடியாது. ஏனென்றால் விஜய் கூட இருந்தால் கண்டிப்பாக வாழ்தான் முடியும். சாக முடியாது” எனக் கூறி அரங்கத்தை அதிரவைத்தார்.