1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. reason behind rajinikanth notice about his images

என் போட்டோவை யூஸ் பண்ணக்கூடாது!.. லாரன்ஸ், அண்ணாமலைக்கு செக் வைத்த ரஜினி!..

rajini
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக போக்கு காட்டி 25 வருடங்கள் தனது ரசிகர்களை நம்பவைத்து இறுதியாக தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வருவதிலிருந்து பின்வாங்கி விட்டார். அரசியலுக்கு வரவில்லை என்றாலும் தான் மிகப்பெரிய அரசியல் சக்தி என்று ரஜினி இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்.

அதனால்தான் விஜய் முதலமைச்சரானது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும்போது நான் வந்திருந்தாலும் கண்டிப்பாக 100 சதவீதம்  வெற்றி பெற்றிருப்பேன் என்று நம்பிக்கையோடு கூறினார்.

1996ம் வருடம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிக்க துவங்கியவுடன் அவர் அரசியலுக்கு வருவார் என எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ திமுக - தமிழ் மாநில காங்கிரஸ் இரு கட்சிக்கும் இடையே கூட்டணி ஏற்படுத்து வெற்றி பெற வைத்தார். அந்த தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது. அதன்பின் திடீரென திமுக ஆதரவு கொடுப்பார்.. திடீரென இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என சொல்வார்... இப்படி மாறி மாறி மக்களை குழப்பி வந்தவர்தான் ரஜினி..

இந்நிலையில்தான், என் பெயர் மற்றும் புகைப்படத்தை எந்த இயக்கமும், அரசியல் கட்சியும் பயன்படுத்தக் கூடாது என நேற்று ரஜினி தரப்பிலிருந்து அறிக்கை வெளியானது. இதற்கு பின்னணியில் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிதாக ஒரு அரசியல் இயக்கம் துவங்கியுள்ளார். அது தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டார் அண்ணாமலை. அங்கு ரஜினியின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல் ரஜினியின் தீவிர விசுவாசியும் நடிகருமான ராகவா லாரன்ஸ் விரைவில் தவெகவில் இணையப் போவதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் அவரும் இது தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் ரஜினி பற்றி முக்கிய விஷயங்களை பேசியிருந்தார். இந்நிலையில்தான், இவர்கள் இருவரும் தன்னுடைய பெயரை பெயரையே, புகைப்படத்தையோ பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காகத்தான் ரஜினி தரப்பிலிருந்து அறிக்கை வெளிவந்ததாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகுமா?.. டிரம்ப் சொல்வது நடக்குமா?...