1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 16 டிசம்பர் 2022 (12:05 IST)

அண்ணா பல்கலைக்கழக தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு!

அண்ணா பல்கலைக்கழக தேர்வு மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


மாண்டஸ் புயல் காரணமாக கடந்த வாரத்தின் சில நாட்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்திருந்தது. முன்னதாக 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் இருந்த தேர்வு மாண்டஸ் புயல் காரணமாக 24 மற்றும் 31 ஆம் தேதிகளுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த தேதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆம், டிசம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த தேர்வு ஜனவரி 19 ஆம் தேதியும், டிசம்பர் 31 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பட்டிருந்த தேர்வு ஜனவரி 20 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.