ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 மே 2024 (12:59 IST)

எம்.எல்.ஏ கன்னத்தில் பளாரென அறைந்த வாக்காளர்.. ஆந்திர தேர்தலில் பரபரப்பு..!

ஆந்திர மாநில தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் ஒரு வாக்குச்சாவடியில் எம்எல்ஏ கன்னத்தில் வாக்காளர் ஒருவர் பளாரென அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் இன்று சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் தெனாலி என்ற தொகுதியில் வாக்களிக்க வந்த எம்எல்ஏ வரிசையில் இருக்காமல் நேராக சென்று வாக்களித்தார்.

அப்போது வாக்காளர்களை ஒருவர் வரிசையில் வருமாறு கூறிய நிலையில் அந்த வாக்காளரை எம்எல்ஏ கன்னத்தில் அறைந்தார். இதனால் ஆக்கிரமடைந்த அந்த வாக்காளர் கன்னத்தில் அறைந்த எம்எல்ஏ வை திருப்பி அறைந்ததால் அந்த வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது .

எம்எல்ஏவை அறைந்த வாக்காளர் மீது எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாக்காளரை அடித்த எம்எல்ஏ ஓஎஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் சிவக்குமார் என்றும் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran