2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் போட்டியிட முடியாது.. 3வது குழந்தையை கொன்ற தந்தை..
மகாராஷ்டிரா மாநிலத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான சம்பவம் மனிதநேயத்தையே உலுக்கியுள்ளது. அங்குள்ள சட்டப்படி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது. இந்த தடையை நீக்கி, எப்படியாவது தேர்தலில் நிற்க வேண்டும் என்ற பதவி வெறியில், ஒரு தந்தை தனது மூன்றாவது மகளையே கொலை செய்துள்ளார்.
கைது செய்யப்பட்ட அந்த நபர், தனது 6 வயது மகளை கொலை செய்துவிட்டு, ஆரம்பத்தில் அது ஒரு இயற்கை மரணம் என்று அனைவரையும் நம்ப வைத்துள்ளார். ஆனால், போலீசாரின் தீவிர விசாரணையில், தேர்தல் விதிகளுக்கு பயந்து திட்டமிட்டு மகளை கொன்றது அம்பலமானது.
இந்தத் தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அரசியல் அதிகாரத்திற்காக பெற்ற மகளையே பலிகொடுத்த இந்த கொடூர தந்தைக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
Edited by Siva