1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 13 மே 2024 (07:29 IST)

விஜய்யும் எம்ஜிஆரும் ஒன்று.. செல்லூர் ராஜூ கூறும் அசத்தல் காரணம்..!

விஜய் மற்றும் எம்ஜிஆர் ஆகிய இருவரும் தங்களுடைய சொந்த பணத்தை மக்களுக்காக செலவு செய்கின்றனர் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அதன் பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு விஜய் பிறந்தநாள் வாழ்த்து கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘எடப்பாடி பழனிச்சாமிக்கு விஜய் வாழ்த்து கூறியது அவருக்கும் பெருமை எங்களுக்கும் பெருமை என்று கூறினார்

மேலும் விஜய் நன்றாக செயல்பட கூடியவர் என்றும் அவர் அரசியல் கட்சி தொடங்கியது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறிய செல்லூர் ராஜு ’எம்ஜிஆர் போலவே சம்பாதித்த பணத்தை மக்களுக்கு செலவழிக்க நினைக்கிறார் விஜய் என்றும் கூறினார்

நேற்று விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்ததை அரசியல் விமர்சகர்கள் வித்தியாசமாக பார்க்கின்றனர். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளுக்கு கூட வாழ்த்து தெரிவிக்க விஜய், எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்ததை அடுத்து பின்னாளில் இருவரும் ஒரே பாதையில் பயணிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

Edited by Siva