1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 மே 2024 (10:24 IST)

ஆந்திர வாக்குச்சாவடியில் கலவரம்.. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்..!

ஆந்திர மாநிலம் வாக்குச்சாவடியில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டின் ஒருசில மாநிலங்களில் இன்று நான்காம் கட்டபோது தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ஆந்திராவில் இன்று பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலில் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் பாஜக, தெலுங்கு தேசம், பவன் கல்யாண் கட்சி, காங்கிரஸ் மற்றும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆகிய மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று காலை 7 மணி முதல் ஆந்திராவில் பரபரப்பாக வாக்குகள் பதிவாகி கொண்டிருக்கும் நிலையில் திடீரென ஒஎஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச கட்சியின் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ரெண்டல கிராமத்தில் வாக்குச்சாவடி அருகே ஒருவரையொருவர் கட்டையால் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டதாகவும், தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் ஏஜெண்டுகள் 2 பேரின் மண்டை உடைக்கப்பட்டதை அடுத்து காயமடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த மோதல் காரணமாக ரெண்டல கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Edited by Mahendran