தொடர்புடைய செய்திகள்
- பவுலர்கள் செய்யும் தவறுக்கு கேப்டன் என்ன செய்ய முடியும்… தடை விவகாரத்தில் செம்ம கோபத்தில் ரிஷப் பண்ட்!
- அணியில் எனது ரோல் இதுதான்… ராஜஸ்தானுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு பேசிய ருதுராஜ்!
- ஃபீல்டிங் செய்ய விடாமல் தடுத்ததாக வினோதமான முறையில் அவுட் கொடுக்கப்பட்ட ஜடேஜா!
- ப்ளே ஆஃப் வாய்ப்பை மேலும் பிரகாசமாக்கிய சி எஸ் கே… புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!
- கட்டுக்கோப்பாக வீசிய சி எஸ் கே பவுலர்கள்… ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்த இலக்கு இதுதான்!
ஐபிஎல் தொடரில் எந்தவொரு வீரரும் படைக்காத சாதனையை நிகழ்த்திய விராட் கோலி!
தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் விராட் கோலி. அவர் 13 இன்னிங்ஸ்களில் 660 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார். இந்த ஐபிஎல் தொடர் மட்டுமில்லாமல் கடந்த 17 ஆண்டுகளாக அவர் சீராக அனைத்து சீசன்களிலும் ரன்களைக் குவித்து வருகிறார்.
இதனால் அவர் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரராக உள்ளார். இவர் 2008 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை ஆர் சி பி அணிக்காக மட்டுமே ஆடி வருகிறார். இது ஐபிஎல் தொடரில் வேறு எந்த வீரருக்கும் நடந்ததில்லை. வெளிநாட்டு வீரரான கைரன் பொல்லார்ட் இது போல மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடியுள்ளார்.
இந்நிலையில் நேற்று நடந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் கோலி ஒரு முக்கியமான மைல்கல் சாதனையை படைத்தார். அவர் ஐபிஎல் தொடரில் தனது 250 ஆவது போட்டியை நேற்று விளையாடினார். ஒரே அணிக்காக இத்தனை போட்டிகள் விளையாடிய ஒரே வீரர் என்ற சாதனையை இதன் மூலம் நிகழ்த்தியுள்ளார்.