1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rishab pant angry over his ban for one match

பவுலர்கள் செய்யும் தவறுக்கு கேப்டன் என்ன செய்ய முடியும்… தடை விவகாரத்தில் செம்ம கோபத்தில் ரிஷப் பண்ட்!

Rishab Pant banned
சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மெதுவாக பந்து வீசியதால் அணி கேப்டன் ரிஷப் பண்ட்க்கு ரூ.30 லட்சம் அபராதமும், ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக இந்த விதி ஐபிஎல் தொடரில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இத்தனைக்கும் ஸ்லோ ஓவர் ரேட்டில் பந்துவீசினால் கடைசி ஓவர்களில் நான்கு பீல்டர்கள் மட்டுமே உள்வட்டத்துக்கு வெளியே நிற்கவைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் ஆடாதது, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்து அந்த போட்டியை தோற்றுள்ளனர். நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு அக்ஸர் படேல் கேப்டனாக செயல்பட்டார்.

அவர் ரிஷப் பண்ட்டுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து பேசும்போது “ஹோட்டல் அறையில் ரிஷப் பண்ட் மிகவும் கோபமாகக் காணப்பட்டார். பவுலர்கள் செய்யும் தவறுக்கு கேப்டன் என்ன செய்ய முடியும். அவர் இந்த தடையை எதிர்த்து அப்பீல் கூட செய்தார்.” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல் தொடரில் எந்தவொரு வீரரும் படைக்காத சாதனையை நிகழ்த்திய விராட் கோலி!