தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவுக்கு இலங்கை செய்த துரோகம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
- 6 மாதங்களில் 3 முறை பால் விலை உயர்வு: அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
- இலவச வேட்டி, சேலை தயாரிப்புக்கான ஆணை எங்கே? அன்புமணி கேள்வி!
- தமிழ்நாட்டை இரு பெருங்கேடுகள் பிடித்து ஆட்டுகின்றன: அன்புமணி ராமதாஸ்
- தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் பெண் தற்கொலை: பாமக கண்டனம்
வார்டு கமிட்டி, ஏரியா சபைகள் குறித்து 90% உறுப்பினர்களுக்கு தெரியவில்லை: அன்புமணி ராமதாஸ்
வார்டு கமிட்டி, ஏரியா சபைகள் குறித்து 90% உறுப்பினர்களுக்கு தெரியவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவத்:
சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு பகுதிக்குமான திட்டங்களை அப்பகுதி மக்களே தீர்மானிக்கும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள வார்டு கமிட்டி, ஏரியா சபைகள் குறித்து 90% மாமன்ற உறுப்பினர்களுக்கு தெரியவில்லை என்று வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன!
வார்டு கமிட்டி தலைவராக அந்தந்த வட்டங்களுக்கான மாமன்ற உறுப்பினர்கள் தான் இருப்பார்கள். அவர்களுக்கே இது குறித்த விவரங்களும், அதிகார வரம்புகளும் தெரியவில்லை என்றால், அந்த அமைப்புகளை அவர்கள் எவ்வாறு வழிநடத்துவார்கள் என்ற வினா எழுகிறது!
சென்னையில் மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. இந்த அமைப்புகள் தமிழகத்தில் இப்போது தான் முதன்முறையாக கொண்டு வரப்படுகின்றன என்பதால் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு புரிதல் இல்லாமல் இருக்கலாம்!
கிராம சபைகளுக்கு இணையான, சில விஷயங்களில் கூடுதல் அதிகாரங்களைக் கொண்டவை வார்டு கமிட்டி - ஏரியா சபைகள். உள்ளாட்சியில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் போகும் இந்த அமைப்புகள் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும், மக்களுக்கும் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்!
